இன்று காலை, மகனை குளிப்பாட்டிய பின், இருவருக்குள் சிறு மனத்தாங்கல். என்ன ட்ரெஸ் போடுவது என்று?
"என்னவோ செய்யுங்கள்", என்று கூறிவிட்டு அறையை விட்டு வந்து விட்டேன். அவரும், படுக்கையில் ஏறி குப்புற படுத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில், ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் கஞ்சி ஊற்றி, படுக்கையின் மீது வைத்து விட்டு சமையல் அறை விளக்கை அணைத்து விட்டு ஓடி வந்தேன். அரை நிமிஷம் ஆகி இருக்குமா?
அப்போதும் படுத்துக் கொண்டே, மகன் ஒரு கள்ளச் சிரிப்புடன் என்னை பார்த்து புன்னகைத்தார். அவசரத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"எதுக்கு சிரிக்கிறீங்க? என்ன பண்ணீங்க?" என்று கேட்டுக் கொண்டே, பையை சரி பார்த்தேன்.
பதில் கிடைக்காததால், நிமிர்ந்து மகனை பார்த்தால்...
அங்கே, அந்த கள்ளச் சிரிப்பின் ஓரத்தில் ஏதோ வெள்ளையாக ஒட்டிக் கொண்டிருந்தது.
நன்றாக பார்த்தால் ஓட்ஸ்!
No comments:
Post a Comment