இன்று காலை வீட்டை பூட்டி கொண்டிருந்தேன். எனது மகன் ஓடி வந்து "அம்மா...." என்று சிறிது இழுத்து அழைத்தார்.
நானும் "என் குட்டி செல்லத்துக்கு என்ன வேணும்?" என்றேன்.
உடனே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு "அம்மா.. கிச்சு .. ப்ளீஸ்" என்றார். சொல்லும்போதே தன் சின்ன சின்ன விரல்களால் தனது கையில் நடனமாட விட்டு காண்பித்தார்.
என் செல்ல குட்டி! தனக்கு கிச்சு கிச்சு செய்ய சொல்லி கெஞ்சும் மகனை இழுத்தணைத்து, கிச்சு கிச்சு செய்வதை தவிர வேறு என்ன வேலை எனக்கு! :-)
4 comments:
:) Lol
கமல், என்னை வேலை வாங்குவது என்றால், அவ்வளவு சிரிப்பு வருகிறதா உங்களுக்கு? :-)
Good post :)
மிக்க நன்றி, செந்தில்.
Post a Comment