இன்று காலை வீட்டை பூட்டி கொண்டிருந்தேன். எனது மகன் ஓடி வந்து "அம்மா...." என்று சிறிது இழுத்து அழைத்தார்.
நானும் "என் குட்டி செல்லத்துக்கு என்ன வேணும்?" என்றேன்.
உடனே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு "அம்மா.. கிச்சு .. ப்ளீஸ்" என்றார். சொல்லும்போதே தன் சின்ன சின்ன விரல்களால் தனது கையில் நடனமாட விட்டு காண்பித்தார்.
என் செல்ல குட்டி! தனக்கு கிச்சு கிச்சு செய்ய சொல்லி கெஞ்சும் மகனை இழுத்தணைத்து, கிச்சு கிச்சு செய்வதை தவிர வேறு என்ன வேலை எனக்கு! :-)
Wednesday, May 30, 2007
Thursday, May 24, 2007
பாப்பர்லி
எனது இரு சக்கர வாகனம் தொந்தரவு கொடுத்ததால், கடந்த சில தினங்களாக ஆட்டோவில் செல்கிறேன். என் மகனை பள்ளியில் விட்டு விட்டு நான் அலுவலகம் செல்ல வேன்டும். என்னுடைய பை, மகனுடைய பை, சாப்பாட்டு கூடை :-), அனைத்தையும் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். சில மாதங்களாக, மகன் நடப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. ஆனால், இந்த முறை தன்னை தூக்க வேண்டும் என்றதால், அவரையும் தூக்கிக் கொண்டு நடையை கட்டினேன்.
சில அடிகள் சென்றவுடன், "அம்மா" என்று அழைத்தார். மூச்சு முட்ட நடந்து கொண்டே "ம்ம்" என்றேன்.
"பாப்பர்லி" என்றார்.
"என்ன சொன்னீங்க?" என்றேன்.
மறுபடியும் "பாப்பர்லி" என்றார். இம்முறை வசதியாக உட்கார தன்னை சரி செய்து கொண்டே சொன்னார்.
ஆகா! என்னிடம், ""PROPERLY" ஆக தூக்கி கொண்டு போ" என்றதை இப்போது தான் புரிந்து கொண்டேன்.
சில அடிகள் சென்றவுடன், "அம்மா" என்று அழைத்தார். மூச்சு முட்ட நடந்து கொண்டே "ம்ம்" என்றேன்.
"பாப்பர்லி" என்றார்.
"என்ன சொன்னீங்க?" என்றேன்.
மறுபடியும் "பாப்பர்லி" என்றார். இம்முறை வசதியாக உட்கார தன்னை சரி செய்து கொண்டே சொன்னார்.
ஆகா! என்னிடம், ""PROPERLY" ஆக தூக்கி கொண்டு போ" என்றதை இப்போது தான் புரிந்து கொண்டேன்.
Wednesday, May 23, 2007
என்னுள் பாட்டுக்கு பாட்டு
காலங்களில் அவள் வசந்தம்
வசந்த முல்லை போலே வந்து
வந்தேன்டா பால்காரன், பசு மாட்ட பத்தி பாட போறேன்
போறாளே பொன்னுதாயி போகிற போக்கில் மனச தொட்டு
தொட்டால் பூ மலரும்ம்ம், தொடாமல் நான் மலர்வேன்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழி வண்ணமே
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வாராயோ தோழி வாராயோ , மண பந்தல் நோக்கி வாராயோ
வாராய் நீ வாராய், போகும் இடம் வெகு தூரம் இல்லை
இல்லை என சொல்வாளோ..
சொல்லு குழந்தாய்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவன் தொழிலாளி
இன்று போய் மற்றொரு நாள் வருகிறேன்.. கை வலிக்கிறது :-)
Subscribe to:
Comments (Atom)