Monday, April 23, 2007

என் செல்ல கன்னுகுட்டி

இன்று காலை, இரண்டரை வயது மகன் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தார். ஏற்கனவே ஜலதோஷம் பிடித்திருந்தது. அதனால், அவரை திட்டினேன். உடனே.., சில வார்த்தைகளே பேசி வரும் அவர் "னோ சாக்லேட் பார் யு" என்றார். எனக்கு ஆச்சரியம்! சிரிப்பை அடக்கி கொண்டு, என்னம்மா செல்லம்? என்றேன். மறுபடியும், மிக தெளிவாக "னோ சாக்லேட் பார் யு" என்றார். நான், கெஞ்சி, "ப்லீஸ் மா செல்லம், அம்மா சாரி சொல்றேன், ஒரே ஒரு சாக்லேட் கொடுங்கமா" என்றேன்!அதற்கு ஒரு கணம் யோசித்து, "அம்மா, சாக்லேட் பினிஷ்" என்றாரே பாருங்கள், என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை! என் செல்ல கன்னுகுட்டி!

3 comments:

R Kamalakkannan said...

:) what a sweet surprise!some poems please!

R Kamalakkannan said...

still not getting the ந :) try in the second word...and copy paste...
voila!

Thaamarai said...

:-). கமல், நன்றி. உங்களிடம் இருந்து முதலில் கமெண்ட் வந்தது மிக்க மகிழ்ச்சி.