Thursday, August 2, 2007

என் பெயர் அம்மா

நேற்று மாலை, மகனுக்கு, பெயர்களை சொல்லிக் கொடுக்கலாம் என்று எண்ணினேன்.

முதலில், அவர் பெயரை சொல்ல வைத்தேன்.

பிறகு, "என் பெயர் "xxx" என்று ஆரம்பித்ததும், அவர், "இல்ல, இல்ல, இது அம்மா" என்றார்.

சரிம்மா, இது அம்மா! ஆனா, அம்மா பெயர் "XXX" என்றதும், அழ ஆரம்பித்து விட்டார்.

இறுதியில் நான் சரணடைந்து விட்டேன்... இனி என் பெயர் "அம்மா..."

No comments: